கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ரூ. 56,000 கோடி வழங்க உறுதி
கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உலக நாடுகளும் பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், நார்வே, சவூதி அரேபியா, ஜப்பான், கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இணைந்து காணொலி மூலம் ஒரு கலந்தாய்வு நடத்தினர்.
நாடுகளும், உலக வங்கி, பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மற்றும் செல்வந்தர்கள் பலரும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
பாப் பாடகி மடோனா எட்டுக்கோடியே 24 லட்ச ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்கா இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
Comments