மே.22ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்

0 2613
தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணத்தை, முந்தைய கணக்கீட்டின் படி, வருகிற 22ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் உள்ள இக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் பகிர்மானம் மற்றும் மின் உற்பத்தி பணிகள் குறித்து, காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொழிற்சாலைகள், வணிக மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வைப் பொறுத்தவரை, சம்பந்தபட்ட அடுத்த மின் அளவீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments