சென்னையில் இன்று ஒரே நாளில் காவல்துறையில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் காவல்துறையை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி மூலம் அவருடன் பணியில் இருந்த 2 அலுவலக காவலர்களுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதே போல, அமைந்தகரை காவல் நிலைய தலைமை காவலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ஆவடி, ராயபுரம், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தலா 2 பேரும், திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிண்டி, திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் தலா ஒரு போக்குவரத்து போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முன்னெச்சரிக்கையாக, அந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
Comments