அத்தியாவசியமல்லாத பொருட்களை டெலிவரி செய்ய அனுமதி...முதல்நாளிலேயே இ-வர்த்தக நிறுவனங்களுக்கு குவிந்த ஆர்டர்கள்
ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் அத்தியாவசியமல்லாத பொருட்களை டெலிவரி செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே இ-வர்த்தக நிறுவனங்களுக்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்துள்ளன.
40 நாட்களுக்கு பின்னர் ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கு பெரும்பாலானோர் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கான ஆடைகள், மின்னணு சாதனங்களுக்கு அதிகளவிலான ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சிவப்பு மண்டலங்களிலும் டெலிவரிக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments