நாட்டு மக்களின் மனநிலையை IPL தொடரால் மாற்ற முடியும் : சஞ்சு சாம்சன்

0 2906

கொரோனா நோய் தொற்று நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்ற முடியுமென நம்புவதாக கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க ஐபிஎல் தொடர் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு சாம்சன் அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு காரணமாக மைதானத்தில் பேட்டிங் பயிற்சி செய்ய முடியாதது கவலையளிப்பதாகவும், இருப்பினும் சகோதரரின் மாடியறையில் வலையை கட்டி, டென்னிஸ் பந்துமூலம் பேட்டிங் பயிற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மைதானங்கள் காலியாக உள்ள நிலையில், எப்போது விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, விளையாட்டு வீரன் என்ற முறையில் முடிந்த வரை சீக்கிரமாக விளையாட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments