சென்னையில் மீண்டும் கட்டுமான பணிகள் தொடக்கம்
40 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட 144 தடை காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று முதல் 144 தடை உத்தரவில் சில விலக்குகளை அரசு அறிவித்தது. அதில் கட்டுமான பணிகளும் அடங்கும். இதனால் சென்னையில் வீடுகள், அலுவலகங்கள் மேம்பாலங்கள் என கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
நேற்று ஹார்டுவேர் விற்பனை கடைகள் திறக்கப்பட்டதால் சிமெண்ட், ஜல்லி, இரும்பு கம்பிகள் போன்றவற்றை வாங்கி வைத்திருந்தனர். இதையடுத்து கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டுவரும் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் ஒரு சில இடங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
Comments