ஊரடங்கால் கிடைத்த அவகாசத்தில் ரயில்வே கட்டமைப்பு பணிகள் தீவிரம்

0 3311

கொரோனா ஊரடங்கால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள அவகாசத்தை பயன்படுத்தி ரயில்வே கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீண்ட காலமாக கிடப்பில் இருந்த பல பணிகளை முடிக்கவும் இந்த அவகாசம் வாய்ப்பளித்துள்ளது. தொடர் ரயில் போக்குவரத்தின் காரணமாக ரயில் பாதைகள், கிராசிங்குகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் மேற்கொள்ள முடியாமல் இருந்த பராமரிப்புப் பணிகள் இந்த அவகாசத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும், ரயில்வே பணி மனைகள் மறு சீரமைப்புச் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன எந்திரங்களைக் கொண்டு ரயில் பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டதாகவும், தனி நபர் இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments