ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அத்தியாவசியமற்ற பொருட்கள் வருவதற்கு காலதாமதம் ஆகும் - ஆன்லைன் வர்த்தக நிர்வாகிகள்
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அத்தியாவசியமற்ற பொருட்கள் வந்து சேருவதற்கு மிகவும் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது கொரோனா பரவலால் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் அமேஸான், பேடிஎம் மால், ஸ்னாப் டீல் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அத்தியாவசியமற்ற சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்தில் அனைத்துப் பொருட்களையும் விற்க மேற்கண்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களில், மளிகைப் பொருட்கள் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டுமே அனுப்ப முடியும். ஆனாலும் மிகக் குறைந்த ஊழியர்களே பணிக்கு வருவதால் அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிப்பதில் அதிக காலதாமதம் ஏற்படக் கூடும் என ஆன்லைன் வர்த்தக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Comments