ஒரே நபருக்கு ரூ.52,000க்கு மதுபானங்கள் விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு

0 3064
ஒரே நபருக்கு 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் வழக்குப்பதிவு

பெங்களூருவில் 52 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை விற்ற கடை ஊழியர் மீது, அம்மாநில கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு 46 நாட்கள் கழித்து கர்நாடகாவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதையடுத்து , பெங்களூருவில் உள்ள மதுபான கடை ஒன்றில் 48 லிட்டர் அளவிற்கு மதுபானங்களை வாங்கிச் சென்ற ஒருவர், அதற்கான ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு இணையத்தில்  வைரலானதை  அடுத்து, சில்லறை வர்த்தகக் கடையில்  மொத்தமாக விற்பனை செய்த குற்றத்திற்காக கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்களை வாங்கிச் சென்றவர் மீது வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏராளமானோர் வாங்கிச் சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments