தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு

0 1247

மும்பையில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் தாராவியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அப்பகுதியில் 94 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை அது 42-ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் மாட்டுங்காவைச் சேர்ந்த ஒரு மாதக் கைக்குழந்தையும் அடக்கம்.

இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 632 ஆகியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் முலம் தொற்று பரவியதும், அவர்களில் பலர் அறிகுறிகள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக மும்பை மாநகராட்சி 4 மருத்துவமனைகளை ஒதுக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments