தாவரவியல் பூங்காவில் 5ஆயிரம் மலர்களை கொண்ட கொரோனா உருவம்
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 5ஆயிரம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு உருவத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக சால்வியா , மேரிகோல்டு, பிக்கோனியா உட்பட பல்வேறு வண்ண மலர்களை கொண்டு வீட்டில் இரு பாதுகாப்பாக இரு என கொரானா உருவம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வருடம் புதுமையாக ஒரு செடியில் சிகப்பு பாதி மஞ்சள் பாதியாக பூத்துக்குலுங்கும் டேலியா மலரும் இடம் பெற்றுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் வானம் பார்த்த பூமி போல காட்சி அளிக்கிறது.
Comments