இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல் முறையீடு

0 1471

கடன் மோசடி வழக்கில் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் லண்டன் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா பிரிட்டன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய்மல்லையா லண்டன் தப்பியோடினார். இது தொடர்பான வழக்கில் லண்டன் கீழமை நீதிமன்றம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறி அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டது.

அதற்கு எதிரான மல்லையாவின் மேல் முறையீட்டு மனுக்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர்நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. இந்நிலையில் விஜய் மல்லையா பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments