தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்

0 16915
கிருலாகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

கிருலாகுண்ட் என்ற பகுதியில் இருக்கும் வாங்கம்-காஸியாபாத் சாவடியில் இருந்த வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்த தாக்குதலில் தென்காசி மாவட்டம் மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த  சந்திரசேகர் என்பவர் உயிரிழந்தார். 92-வது பட்டாலியனை சேர்ந்த இவர், கடந்த 2014 முதல் ராணுவத்தில் சேவையாற்றி வந்துள்ளார்.

இவருடன் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இருதினங்களுக்கு முன்பாக, ஹந்த்வாராவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போதைய இந்த தாக்குதல் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments