கொரோனா ஒழிப்பு மருந்து கண்டுபிடிப்பில் முதல்கட்ட வெற்றி ?

0 12269
கொரோனா வைரசை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பில் ஆரம்ப கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த இரண்டு பயோடெக் நிறுவனங்கள் இன்று தெரிவித்துள்ளன.

கொரோனா வைரசை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பில் ஆரம்ப கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த இரண்டு பயோடெக் நிறுவனங்கள் இன்று தெரிவித்துள்ளன.

வீர் பயோடெக்னாலஜி  (Vir Biotechnology) அல்னிலாம் பார்மசூட்டிகல்ஸ் (Alnylam Pharmaceuticals) என்ற இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரசின் ஆர்என்ஏ கூறுகளில் குறுக்கீடு செய்யும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த மருந்து உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளன.

இதன் மூலம் வைரசின் குறிப்பிட்ட மரபணு கூறு ஒழிக்கப்பட்டு நோயை பரப்பும் அதன் உயிர்க்கொல்லி புரதம் செயலிழக்க வைக்கப்படும் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த ஆண்டு இறுதி வாக்கில் இந்த மருந்தை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க முடியும் எனவும் அந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments