மே 7 முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு : தமிழக அரசு
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள், வருகிற 7- ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், தமிழக எல்லைப்புற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் அங்கு மது பிரியர்கள் செல்வதை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரம், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் நிச்சயம் திறக்கப்படாது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும். ஆனால், மதுபான கடைகளில் பார்கள் செயல்பட அனுமதி கிடையாது.
கூட்டம் சேருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
இதுதவிர, சுமார் 6 அடி தூரம் வரை ஒருவருக் கொருவர் தள்ளி நின்று, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப் பாடு களை விதித்துள்ளது.
Comments