அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி உயரும் கொரோனா உயிர்ப்பலி

0 6669
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்ததால், பலி ஆனோர் எண்ணிக்கை ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்ததால், பலி ஆனோர் எண்ணிக்கை ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளெல்லாம் கொரோனாவின் பீதியில் உறைந்து கிடக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வைரஸ் தொற்றால் 2 ஆயிரத்து 573 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் மட்டும் 83 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது. 11 ஆயிரத்து 762 பேர், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மஹாராஷ்டிராவில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை நெருங்க, உயிர்ப்பலி 548 ஆக உயர்ந்தது.

குஜராத்தில் பாதிப்பு, 5 ஆயிரத்து 500 ஐ நோக்கி முன்னேற , டெல்லியில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ கடந்து விட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்தது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நோக்கி முன்னேற, உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி உள்ளது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 600 - ஐ நெருங்க, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டியது. இதன்மூலம், வைரஸ் தொற்றுக்கு, ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்க ளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

கேரளாவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் 27 புள்ளி ஐந்து இரண்டு சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments