கொரோனா ஒழிப்பில் DRDO வின் மேலும் ஒரு பங்களிப்பு
கொரோனோ ஒழிப்புக்கு உதவும் வகையில் அல்ட்ரா வயலட் கிருமி நீக்க கோபுரம் ஒன்றை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கி உள்ளது.
இதற்கு யுவி பிளாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், மெட்ரோ நிலையங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் திரளும் இடங்களில் தொற்று நீக்கம் செய்ய இந்த யுவி பிளாஸ்டர் உதவிகரமாக இருக்கும்.
ரசாயன கிருமிநாசினிகளை நேரடியாக பயன்படுத்த முடியாத இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும் இதை பயன்படுத்தி தொற்று நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
வைஃபை இணைப்புடன் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் வழியாக யுவி பிளாஸ்டர்களை இயக்கலாம். 400 சதுர அடி உள்ள இடத்தை கிருமிநீக்கம் செய்ய 30 நிமிடங்கள் இதற்கு போதுமானது.
Comments