தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

0 4240
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பலரும் மது பழக்கத்தை கைவிட்டு வருவதாகவும், குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அமர்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்த போது, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம்  தலையிட முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் மத்திய அரசு தளர்வளித்துள்ள போதும் தமிழத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments