சென்னை கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றம்

0 7095
பொதுமக்களின் பாதுகாப்புக் கருதிச் சென்னை கோயம்பேடு சந்தை செவ்வாய் முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதிச் சென்னை கோயம்பேடு சந்தை செவ்வாய் முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, கோயம்பேடு சந்தை செவ்வாய் முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் திருமழிசையில் தற்காலிகமாகக் காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சிறு வணிகர்கள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments