பேரதிர்ச்சி கொடுத்த கொரோனா புதிய உச்சம் எட்டிய தமிழகம்

0 19677
தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.
 
3- வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு ஒருபக்கம் அமலுக்கு வர, மற்றொரு பக்கம் கட்டுப்பாடு தளர்வுகளும் செயல்பாட்டுக்கு வந்துள்ள முதல் நாளில், தமிழகத்தின் கொரோனா பாதிப்பு, பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில், முதன்முறையாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 107 பேர், சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனிமை வார்டுகளில் தங்கி, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 662 பேர் ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலி ஆனதால், உயிரிழப்பு 31 ஆக கூடியது.

ஒரே நாளில் 12 ஆயிரத்து 863 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆக மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 970 பேர், பரிசோதனை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 30 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனவே, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஆயிரத்து 409 ஆக அதிகரித்தது.

இருந்த போதிலும் தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments