மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகள் வீழ்ச்சியுடன் வணிகம் நிறைவு
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகள் வீழ்ச்சியுடன் வணிகம் நிறைவடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை ஆகிய நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. இதனால் கடந்த இரு மாதங்களாகப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே மும்பை பங்குச்சந்தை வீழ்ச்சியைச் சந்தித்தது.
வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து இரண்டு புள்ளிகள் சரிந்து 31 ஆயிரத்து 715 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 566 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 293 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குவிலை 11 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.
Comments