நடிகர் ரிஷி கபூரின் அஸ்தி மும்பை பான்கங்கை நதியில் கரைப்பு

0 1831
ஊரடங்கு காரணமாக ஹரித்துவாருக்கு போக முடியாததால், மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் அஸ்தியை, அவரது குடும்பத்தினர் மும்பை பான்கங்கை நதியில் (Banganga River) கரைத்தனர்.

ஊரடங்கு காரணமாக ஹரித்துவாருக்கு போக முடியாததால், மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் அஸ்தியை, அவரது குடும்பத்தினர் மும்பை பான்கங்கை நதியில் (Banganga River) கரைத்தனர். 

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரிஷி கபூர் கடந்த 30 ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியை ஹரித்துவார் கங்கை நதியில் கரைக்க முடிவு செய்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் கோதாவரியின் கிளை நதியான மும்பை பான்கங்கையில் அஸ்தி கரைக்கப்பட்டதாக ரிஷி கபூரின் சகோதரர் ரந்தீர் கபூர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments