ஏப்ரல் மாதத்துக்கான கூடுதல் அரிசி மே, ஜூன் மாதங்களில் வழங்கப்படும் - உணவுத்துறை அமைச்சர்
தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ஒரு ஆளுக்கு 5 கிலோ அரிசி வீதம் கூடுதலாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2 யூனிட் வரையுள்ள குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும், 3 யூனிட் குடும்ப அட்டைக்கு 30 கிலோ அரிசியும், 4 யூனிட் குடும்ப அட்டைக்கு 40 கிலோ அரிசியும், 5 யூனிட் குடும்ப அட்டைக்கு 50 கிலோ அரிசியும், அதற்கு மேல் யூனிட்கள் உள்ள குடும்ப அட்டைகளுக்கு அவர்கள் வாங்கும் அரிசி இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், தகுதியான அளவு சர்க்கரை ஆகியன மே மாதத்திலும் விலையில்லாமல் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments