கொரோனா குறித்த பல உண்மைகளை மூடி மறைத்து , மருத்துவ பொருள்களை பதுக்கியது சீனா - அமெரிக்க பாதுகாப்பு துறை

0 2208

கொரோனா உலகளாவிய தொற்றாக மாறும் என தெரிந்தும், அதற்கான மருத்துவப் பொருள்களை பதுக்கி வைக்கும் நோக்கில், தொற்று குறித்த பல தகவல்களை சீனா மூடி மறைத்தது என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தயாரித்துள்ள அறிக்கையில், கொரோனா பயங்கர உயிர்க்கொல்லியாக மாறும் என்பது சீன அரசுத் தலைமைக்கு கடந்த ஜனவரி மாத துவக்கத்திலேயே தெரியும் என்றும், வேண்டும் என்றே திட்டமிட்டு அதை அவர்கள் மறைத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று தொற்று துவங்கிய காலக்கட்டத்தில், உலக சுகாதர நிறுவனத்திடம் உண்மையை மறைத்து வழக்கத்திற்கு மாறாக உடல் பாதுகாப்பு கவசங்களை பெருமளவில் சீனா இறக்குமதி செய்த தாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த அறிக்கை உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments