போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு

0 1217
சின்னதிரை, பெரிய திரை போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி அளிக்கக் கோரித் தமிழக அரசிடம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

சின்னதிரை, பெரிய திரை போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி அளிக்கக் கோரித் தமிழக அரசிடம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவைச் சந்தித்து மனு அளித்த பின் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சிவா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் திரைத்துறைக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி கிடைத்தால் நிறைய படங்களின் பணிகள் முடியும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments