மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்..
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் மே மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திலும் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே வீடுவீடாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
ஒரு கடையில் ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நியாயவிலைக் கடையில் டோக்கன்களைக் கொண்டுவந்த மக்கள் சமூக விலகலுடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
Comments