மது விற்பனைக்கு அனுமதி...குடிப்பவர்களுக்கு புதிதாக ’தடை வரி’... அதிரடியில் ஆந்திரா

0 9578

ஆந்திரப்பிரதேசத்தில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் தடை வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மதுக்கடையில் 5 பேருக்கு மேல் நிற்க அனுமதிக்கக் கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கூட்டம் கூடினால் கடையை அடைத்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வருவாயை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை திறக்க அனுமதித்திருந்தாலும், மது அருந்துவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக தடை வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments