சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி?

0 6263

மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகளுக்கு அனுமதி பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கும் வசதி இருந்தால் பிற கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் 25 சதவீத பணியாளர்களை (குறைந்தது 20 பேர் கொண்டு) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பணியாளர்கள், நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே வரவேண்டும்

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிஅத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர அனைத்து தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின்மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிபிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் போன்ற பணியாளர்களும், சிறப்பு தேவை உள்ளோருக்கான வீட்டு வேலை பணியாளர்களும் https://tnepass.tnega.org/#/user/pass இணைய தளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம் மேலும், இதுதவிர மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்

வேளாண் சார்ந்த பணிகள், தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments