முதல்முறையாக அணி சேரா இயக்க மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி

0 7189

காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறும் அணி சேரா இயக்கத்தின் உச்சிமாநாட்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அமைப்பின் தலைவராக உள்ள அஜர்பைஜான் நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில், கொரோனா பரவலை கூட்டாக எதிர்த்து போராடுவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

மோடி பிரதமராக ஏற்ற பின்பு நடைபெற்ற இரண்டு அணி சேரா இயக்க மாநாட்டிலும், அவர் பங்கேற்காத நிலையில் இம்முறை அவர் பங்கேற்கிறார். ஏற்கனவே, கொரோனாவிற்கு எதிரான போரில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என மோடி வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்த மாநாட்டில் அவர் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் ஐநா சபை பொதுச் செயலாளர் ஆண்டோனியா குட்ரெஸ்(António Guterres), உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments