கூட்ட நெரிசல் இன்றி வங்கிகளில் பணம் எடுக்க புதிய நடைமுறை

0 4934

ஊரடங்கில் பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகளவில் கூடுவதை முறைப்படுத்த, இந்திய வங்கிகள் சங்கம் இன்று முதல் மே 11ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாதத்தின் முதல் வாரம் என்பதால் பல நிறுவனங்கள் ஊதியம் வழங்க உள்ளன.

இதனால் பணம் எடுக்க மக்கள் அதிகளவில் வங்கிகளில் கூடி விடக்கூடாது என்பதற்காக, வங்கிக் கணக்கின் கடைசி எண் பூஜ்ஜியம் அல்லது 1 என இருப்பின் அவர்கள் மட்டும் இன்று பணம் எடுத்துதுக் கொள்ளலாம். இதே போன்று அடுத்த இரண்டு எண்களை கொண்ட வாடிக்கையாளர்கள், அடுத்தடுத்த நாட்களில் பணத்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments