அனைத்து தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் இன்று முதல் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் இயங்க, அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மூன்றாவது கட்டமாக மத்திய அரசு நீட்டித்துள்ள ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றார். தொடர்ந்து, மத்திய அரசு அறிவுறுத்திலின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கலாம் எனவும், அனைத்து விதமான கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை எந்த அனுமதியும் இன்றி இயங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
#புதுச்சேரி 04-05-2020 முதல் தொழிற்சாலைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைதான் கடைகள் திறந்து இருக்க வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/Zw1nu6Otal
— V.Narayanasamy (@VNarayanasami) May 3, 2020
Comments