மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

0 2076

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்காக கடந்த இரண்டு நாட்களாக டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மட்டும் பயனாளர்கள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை பெற்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க, நாளொன்றிற்கு நூறு பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments