கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் இன்று முதல் ஊபர் கால் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி
பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பாதிப்பு குறைந்த பகுதிகளுக்கு இன்று முதல் ஊபர் கால் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
பச்சை , ஆரஞ்சு மண்டலங்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அமிர்சதசரஸ் போன்ற முக்கிய நகரங்களில் ஊபர் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
எந்தெந்த நகரங்களில் டாக்சி சேவை கிடைக்கும் என்பதை அறிய ஊபர் ஆப்பை பயன்படுத்தி அறிந்துக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருந்துகள்,அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கு டெலிவரி செய்வதற்கும் ஊபர் நிறுவனம் வாகன சேவைகளை அறிவித்துள்ளது.
In compliance with government regulations, we're resuming our services in Green and Orange zones. In the Red zones, we will continue to #MoveWhatMatters & help citizens travel for their essential needs. Learn more: https://t.co/XXZifekcBz
— Uber India (@Uber_India) May 3, 2020
Comments