திரைப்படம், தொலைக்காட்சிகளுக்கு சில பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் - ஆர்.கே செல்வமணி

0 3454
திரைப்படத்துறைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனையோடு சில பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபலங்கள் வழங்கிய நன்கொடைகள் மூலம் இதுவரை திரைப்பட தொழிலாளர்களை காப்பாற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இனியும் வேலை முடக்கம் நீட்டிக்கப்பட்டால் பசிப்பிணி சாவுகளை தங்கள் தொழிலாளர்கள் எதிர்நோக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கினால் 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்என கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments