கோயம்பேட்டில் மேலும் 18 பேருக்கு வைரஸ் தொற்று
சென்னை மாநகரில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், கோயம்பேடு பகுதியில் மட்டும் ஒரே நாளில் 18 பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்று திரும்பியோர், அடுத்தடுத்து கொரோனாவின் பிடியில் சிக்கி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மொத்த வியாபாரி கள் 2 பேருக்கும், பூ வியாபாரிகள் 5 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கோயம் பேடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர, கோயம்பேடு வந்து சென்ற சில்லரை வியாபாரிகள் மூலம் அசோக் நகர், வடபழனியில் 20 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதன்மூலம் கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பால், கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் உருவாகி உள்ளது.
Comments