பன்னாட்டு நிதிச் சேவை மையத்தை மும்பையில் இருந்து மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு சரத்பவார் எதிர்ப்பு
பன்னாட்டு நிதிச் சேவை மையத்தை மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவு தவறானது எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிதி அமைப்புகளையும், வணிக நிறுவனங்களையும் மகாராஷ்டிரத்துக்கு வெளியே கொண்டுசெல்லும் மத்திய அரசின் முயற்சி அரசியல் இடையூறுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது நாட்டுக்கு நிதிச் சேதத்தை விளைவிக்கும் என்றும், உலக அளவில் மும்பையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முதல் பத்து வணிக மையங்களில் ஒன்றாகத் திகழும் மும்பை, நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 25 விழுக்காட்டையும், மூலதனப் பரிமாற்றத்தில் 70 விழுக்காட்டையும் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி வைப்புத் தொகைகளில் 22 விழுக்காட்டை மகாராஷ்டிரம் மட்டுமே கொண்டுள்ளதையும் சரத்பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments