கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி

0 2528
சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பூ மார்க்கெட் வியாபாரிகள் மேலும் 5 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் இருவர் உட்பட மேலும் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 18 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கோயம்பேட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments