கொடூரமாகும் கொரோனா 35 லட்சத்தை தாண்டியது பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொலைகார கொரோனா நோய்க்கு ஆயிரகணக்கில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
உலக வல்லரசான அமெரிக்காவில் 11 லட்சத்து 60 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28 ஆயிரத்து 700 பேர் உயிரை பறி கொடுத்துள்ளனர்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உள்ளது .
உலகில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் 21 லட்சத்து 28 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் 11 லட்சத்து 28 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Comments