அம்பத்தூரில் ஒரே நேரத்தில் கூடிய 2 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் திரண்டனர்

0 17963
ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில கூலி தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் திரண்டனர்.

ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில கூலி தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் திரண்டனர்.

தமிழகத்தில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, தங்களை பற்றிய முழு விவரங்களை கொடுப்பதற்காக அம்பத் தூரில் கூடிய வட மாநில தொழிலாளர்களிடம் காவல் துறையினர், கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல், ஒரேநேரத்தில் ஏராளமானோர், ஒரே இடத்தில் கூடியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே, 9 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments