பாஸ்ட்புட், ரிபைன்டு உணவு வகைகளால் கொரோனா அபாயம் அதிகரிக்கும்
உடல் எடையை மட்டும் கூட்டும் பாஸ்ட் புட், ஸ்நாக்ஸ்,மைதா போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு கொரோனாவுக்கு நோய் எதிர்ப்பை உருவாக்கும் உணவுகளை இந்தியர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என லண்டன் முன்னணி இந்திய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட லைப்ஸ்டைல் நோய்கள் அதிகமாக இருப்பதால் கொரோனா தாக்குதல் பலமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் கூறி உள்ளார்.
இதன் காரணமாகவே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கொரோனா இறப்புகள் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு கொரோனா ஆபத்து 10 மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுவதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
எனவே நீரிழிவு நோயாளிகள் உடனடியாக தங்களது குளுக்கோஸ் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார். சைவ உணவாளர்கள் முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும், அசைவ பிரியர்கள் இறைச்சி, முழு கொழுப்பு பால், பால் பொருட்கள், முட்டை, மீன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
Comments