மீனாட்சி திருக்கல்யாணத்தை வீட்டிலிருந்தே மக்கள் கைபேசி மூலம் பார்க்கலாம் - செல்லூர் ராஜூ
நாளை நடைபெற உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்தை மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாக பார்த்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அருளைப் பெறலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் பல பகுதிகளில் ஏழை மக்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆர்வமிகுதியால் மக்கள் வெளியே வருவதை தடுக்க காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்
Comments