கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை கிண்டலடித்து சீனா குறும்படம்
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை கேலி செய்யும் வகையில் அனிமேஷன் குறும்படம் ஒன்றை வெளியிட்டு சீனா எள்ளி நகையாடி உள்ளது.
Once Upon a Virus என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் Lego போன்ற உருவங்களில் ஒரு போர் வீரனும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையும் இடம் பெற்றுள்ளன.
புதிதாக வைரஸ் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறான் போர் வீரன். அதனால் என்ன அது வெறும் புளூ வாக இருக்கும் என கூலாக பதிலளிக்கிறது சுதந்திர தேவி சிலை.
நிலைமையின் தீவிரம் புரிகிறதா என்று கேட்கும் போர் வீரனிடம், நாங்கள் மாற்றி மாற்றி பேசினாலும் சரியாகத்தான் பேசுவோம் என்ற ஒரு டயலாக்கை எடுத்து விடுகிறது சுதந்திர தேவி சிலை.
நீங்கள் இப்படி பேசுவதால் தான் எங்களுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கிறது என்ற பாணியில் டிரம்பின் பேச்சை கிண்டலடிக்கும் விதத்தில் முடிகிறது குறும்படம்.
China: We discovered a new virus.
— China Xinhua News (@XHNews) April 30, 2020
America: So what?
China: It's Dangerous
America: It's only a Flu
China: Wear a Mask
America: Don't wear a Mask
... pic.twitter.com/Qxugv8z73J
Comments