"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்னையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் டெல்லி சென்றனர்
சென்னையில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் டெல்லி புறப்பட்டனர்.
சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 24-ஆம் தேதி முதல் சென்னையில் ஆய்வு மேற்கொண்டனர்.
முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோரிடம் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சார்பிலான நடவடிக்கைகள், களப்பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றும் தன்மை, அம்மா உணவகத்தில் உணவின் தரம், உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ராயபுரம், திரு.வி.க. நகர் தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான தொற்று பரவலுக்கு காரணம் குறித்தும் ஆய்வு செய்தனர். தங்கள் ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர்கள் நாளை அளிக்கின்றனர்.
Comments