சென்னையில் காவல்துறையினர் 25 பேருக்கு கொரோனா தொற்று

0 3218
சென்னையில் காவல்துறையினர் 25 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிப்பவர், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார்.

சென்னையில் காவல்துறையினர் 25 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிப்பவர், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் சென்னையில் காவல்துறையினர் 3 பேருக்கு இன்று மட்டும் கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் காவல்துறையினர் 22 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. இந்த 25 பேரும் சென்னை காவல்துறையில் உளவு பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து பிரிவில் பணியாற்றுபவர்கள் ஆவர்.

இதனால் அவர்களுடன் தொடர்பிலிருந்தோரை தனிமைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments