மும்பை, புனேயில் ஊரடங்கு தளர்வு இல்லை

0 2600
மும்பை, புனே நகரங்களில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படாது என மகாராஷ்டிர அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்பை, தானே, பால்கர், புனே, நாசிக் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

இவற்றில் மும்பை, புனே பெருநகரப் பகுதிகளில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த இருவாரங்களுக்கு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் ஆணையில், மும்பையில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களைத் திறக்க அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிட்டுள்ளது.

மாநிலத்தின் நகர்ப்புறங்களில் தனியாக உள்ள கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மும்பை, புனே பெருநகரப் பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதி இல்லை.

மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் நூறு விழுக்காடு அலுவலர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை, புனே பெருநகரப் பகுதிகளில்
அனுமதிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments