கிம் ஜாங் உன் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது மகிழ்ச்சி - ட்ரம்ப்

0 4736

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து கிம், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காததால் அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்றும், உயிரிழந்து விட்டார் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு தினங்களுக்கு முன்பு உர ஆலை ஒன்றின் திறப்பு விழாவில் அதிபர் கிம் ஜாங்க் உன் பங்கேற்று ரிப்பன் வெட்டிய காட்சி வெளியானது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உடல் நலத்துடன் திரும்பி வந்ததை கண்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments