உ.பி.யில் 19 சிவப்பு மண்டலங்களிலும் ஊரடங்கை தளர்த்தும் திட்டமில்லை -முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்திலுள்ள 19 சிவப்பு மண்டலங்களிலும் ஊரடங்கை தளர்த்தும் திட்டமில்லை என அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றும் எனவும், சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை பச்சை மண்டலங்களாக மாற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மாத வருவாய் 17 ஆயிரம் கோடி முதல் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருந்ததாகவும், ஊரடங்கு காரணமாக தற்போது ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்து விட்டதாகவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். பிற மாநிலங்களில் இருக்கும் உத்தரப் பிரதேச தொழிலாளர்கள், அந்த மாநிலங்களிலேயே இருக்கும்படியும், அவர்களை சொந்த ஊருக்கு மாநில அரசு அழைத்து வருமென்றும் அவர் கூறியுள்ளார்.
Comments