பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு உணவுகளை வழங்க அமைச்சர் வலியுறுத்தல்

0 1427

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு மானிய விலைத் திட்டத்தில் உணவு தானியங்களை வழங்குமாறு மாநிலங்களிடம் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,மத்திய அரசின் மானிய விலைத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருள்களைப் பெற்று அதை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு வழங்குமாறு மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப்பொருள்களை வழங்க தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகளுக்கு தமது அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழலில் உணவுப் பொருள்களைப் பதுக்கி வைப்போர், அதிக விலைக்கு விற்போர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments