ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில்

0 1758

ஆரோக்கிய சேது செயலி மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த துணை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், ஆரோக்கிய சேது ஆப் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு துணையாக இந்த செயலி திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் பிறரை கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்திற்காக எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆரோக்கிய சேது செயலி ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்புச் செயலிதான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியிருந்தார். ட்விட்டரில் அவர் விடுத்திருந்த பதிவில், ஆரோக்கிய சேது செயலியை தனியார் அமைப்பு வடிவமைத்துள்ளதாகவும், அதில் தனி மனித பாதுகாப்புகள், தரவுப்பாதுகாப்புகள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments