ஊரடங்கு காலத்தில் பராமரிப்புப் பணியில் ரயில்வே மும்முரம்
பயணிகள் ரயில் போக்குவரத்து மார்ச் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதைக். கிடப்பில் இருந்த பணிகளை முடிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாக ரயில்வே துறை பயன்படுத்தி வருகிறது.
ஐந்நூற்றுக்கு மேற்பட்ட தண்டவாளப் பராமரிப்பு எந்திரங்கள் பணி செய்து வருகின்றன. இதேபோல் 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சிக்னல், மின்பாதைப் பராமரிப்புப் பணியும், முப்பதாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டவாளத்தில் விரிசலைக் கண்டறிந்து சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகின்றன.
வாழ்நாளில் ஒருமுறை கிடைத்த வாய்ப்பாகக் கருதிப் புதிய பாலங்கள் கட்டுதல், பழைய பாலங்களில் புதிய உத்தரங்கள் பொருத்திச் சீரமைத்தல், பழைய பாலங்களை உடைத்தல் ஆகிய பணிகளையும் ரயில்வே துறை மும்முரமாகச் செய்து வருகிறது.
Comments